அண்மைய செய்திகள்

  
-

முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் நவீன இயந்திரமயமாக்கல் உற்பத்தி அலகு ஆளுநரால் திறந்து வைப்பு



முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் நவீன  இயந்திரமயமாக்கல் உற்பத்தி அலகு ஆளுநரால் திறந்து வைப்பு 


உலக வங்கியின் நிதி அனுசரணையில் விவசாய நவீனமையமாக்கல் திட்டத்தின் கீழ் முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக் கூட்டல் அலகினை திறந்துவைத்துள்ளது.


முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் முத்துவிநாயகர்புரத்தில் அமைந்துள்ள முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக் கூட்டல் அலகினை  விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த  வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்யைதினம்(06) மு.ப.10.30 மணிக்கு திறந்துவைத்தார்.


குறித்த நிறுவனத்தின் "முத்து ஜம்போ பீனட்ஸ்" நிலக்கடலை உத்தியானது இன்று இலங்கையில் முக்கியமான உற்பத்தி நுகர்வுப் பொளுளாக வளர்சியடைந்ததுடன் சர்வதேச சந்தையில் இடம்பிடிக்கும் நிலையினை தற்போது அடைந்துள்ளதமை சிறப்பான அம்சமாகும். 


குறித்த உற்பத்திக்கு பங்குதாரான விசாயிகள் பலர் இதனால் பாரிய இலாபத்தினை அடைந்துவருகின்றார்கள். 


நேற்றுவரையில் ஒரு நாளைக்கு 10kg ஜம்போ நிலக்கடலை உற்பத்தியினை செய்துவந்த  "முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட்"  நிறுவனம் இன்றிலிருந்து இயந்திர மயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக் கூட்டல் ஊடாக ஒரு நாளைக்கு 1000kg ஜம்போ நிலக்கடலை உற்பத்தியினை மேற்கொள்ள முடியும் என்பது முக்கியமான  அம்சமாக மாறியிருக்கின்றது. 


இதன்மூலம் பங்குதாரரான விவசாயிகள் நிலக்கடலை உற்பத்தி மேலும் அதிகரிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் குறித்த நிறுவனத்தில் பதினைந்து ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.

 

இன்றைய இந்த விழாவில் வடக்கு மாகான பிரதம செயலாளர் இ.இளங்கோபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்,  வடக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சு.செந்தில்க்குமரன் , பிரதி மாகாண  விவசாயப் பணிப்பாளர் , கிராம அலுவலகர், முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவுனர், நிறைவேற்றுப் பணிப்பாளர், முகாமையாளர், ஏனைய ஊழியர்கள், கிராம மட்ட  விவசாய அமைப்பினர், விவசாயிகள் எனப் பலரும் கலந்துசிறப்பித்தனர்  














முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் நவீன இயந்திரமயமாக்கல் உற்பத்தி அலகு ஆளுநரால் திறந்து வைப்பு Reviewed by Author on February 06, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.