மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி ஐந்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தியது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி இன்றைய தினம் புதன்கிழமை (12) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
-மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை ,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்
மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி ஐந்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தியது.
Reviewed by Vijithan
on
March 12, 2025
Rating:

No comments:
Post a Comment