விமானப் படையின் விமான விபத்திற்கான காரணம் வௌியானது
வாரியபொல மினுவன்கெட்ட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான போர் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் வௌியாகியுள்ளது.
பயிற்சியின் போது ஏற்பட்ட தவறால் இந்த விபத்து ஏற்பட்டதாக அது குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டமான பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான கட்டுமானப் பணிகளின் கண்காணிப்பு நடவடிக்கையில் நேற்று இணைந்து கொண்டிருந்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
"விமானத்தின் இயந்திரத்திலோ அல்லது அதன் வயதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை.
அது பழைய விமானம் இல்லை. விமானங்களில் L போட் வைக்கப்படாவிட்டாலும் அதில் சென்றவர்கள் பயிற்சி பெறுவோரே.
அவர்களினால் தவறு ஏற்பட்டுள்ளது.. "அதைத் தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை."என்றார்.
விமானப் படையின் விமான விபத்திற்கான காரணம் வௌியானது
Reviewed by Vijithan
on
March 24, 2025
Rating:

No comments:
Post a Comment