இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; பற்றி எரியும் கிழக்கு யார்க்ஷயர்
பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள வடக்குக் கடலில் ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலும் ஒரு சரக்குக் கப்பலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது.
குறித்த விபத்து யார்க்ஷயர் கடற்கரையின் ஹல் அருகே திங்கட்கிழமை காலை 10 மணியவில் நடந்தது.
கிழக்கு யார்க்ஷயர் கடற்கரையில் திங்கட்கிழமை காலை 9:58 மணியளவில் ஒரு டேங்கர் கப்பலும் சரக்குக் கப்பலும் மோதியதாக அலாரம் எழுப்பப்பட்டது.
இந்த விபத்தில் 37 பேர் பாதுகாப்பாகக் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். மேலும் காயமடைந்தவர்களில் எண்ணிக்கை இதுவரை வெளிவரவில்லை. கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு கப்பல்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அதனால் கப்பல்கள் கைவிடப்பட்டுள்ளன எனவும் கூறுப்படுகிறது.
Reviewed by Vijithan
on
March 11, 2025
Rating:


No comments:
Post a Comment