மன்னாரில் இடம்பெறவுள்ள "மாற்குவின் கலை அம்பலம்" காண்பியக்காட்சி
இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 16 திகதி வரை மன்னாரில் இடம் பெறவுள்ளது
மாற்கு அவர்களின் மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்து குறித்த காண்பியக்காட்சியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் மாற்கு அவர்களினால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கு அதிகமான கலைபடைப்புக்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது
எனவே குறித்த கண்காட்சியை அனைவரும் வருகை தந்து பார்வையிடுமாறு ஏற்பாட்டு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
காலம் - 13.03.2025 தொடக்கம் 16.03.2025
நேரம் - காலை 9.30 தொடக்கம் மாலை 5 மணிவரை
இடம் - 77 வயல் வீதி சின்னக்கடை மன்னார்

No comments:
Post a Comment