பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் 6 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் பத்மசிறி ஜயவர்தன இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மற்றைய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி
5 மாணவர்கள் உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,
15 வயதுடைய மாணவி ஒருவர் மேலதிக வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது காதலனுடன் வெளியே சென்றுள்ளார்.
இதன்போது காதலன் மாணவியை ஏமாற்றி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவியின் பெற்றோரால் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவியும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஏழு சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
April 05, 2025
Rating:


No comments:
Post a Comment