யாழ். இந்து கல்லூரி ; உயர்தர பரீட்சையில் வரலாற்று சாதனை
நேற்றையதினம் வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3 ஏ சித்திகளையும், 55 2 ஏ சித்திகளையும், 19 ஏ 2பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான சி.ஜமுனானந்தா பிரணவன் (முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
அத்துடன், விஞ்ஞான பிரிவில் 22 பேர் 3A சித்திகளையும் 13 பேர் 2A சித்திகளையும் 06 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர்.
பௌதீக விஞ்ஞான பிரிவில் 27 பேர் 3A சித்திகளையும் 16 பேர் 2A சித்திகளையும் 11 பேர் A2B சித்திகளையும் அடைந்துள்ளனர்.
யாழ் பல்கலை மாணவனின் மரணத்திற்கான காரணம் வெளியானது
யாழ் பல்கலை மாணவனின் மரணத்திற்கான காரணம் வெளியானது
மேலும், வணிகப்பிரிவில் ஒருவர் 3A சித்திகளையும் 2 பேர் 2A சித்திகளையும் 2 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவில் 02 பேர் 2A சித்திகளை அடைந்துள்ளனர். இதேவேளை, உயிரியல் தொழிநுட்பப் ( B-Tech) பிரிவிலும் இயந்திரவியல் தொழினுட்ப (E-Tech) பிரிவிலும் தலா ஒருவர் 3A சித்திகளை பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment