முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில் நுட்ப பிரிவில் சாதித்த மாணவன் வாணுசன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில் நுட்ப பிரிவில் சாதித்த மாணவன் வாணுசன்
அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் வாணுசன், மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் வசித்து வருகின்ற பரமேஸ்வரன் வாணுசன் விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்த மாணவன் ஆவார் இவர் ஆரம்ப கல்வியை பண்டாரவணியன் மகா வித்தியாலயத்திலும் அதனை தொடர்ந்து உயர்கல்வியை ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திலும் கற்று உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தார்
இன்னிலையில் அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2B C பெறுபேற்றினை பெற்று பொறியியல் தொழில்நுட்பத் துறையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்
குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Reviewed by Vijithan
on
April 30, 2025
Rating:





No comments:
Post a Comment