அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை இந்தியாவிற்கு இடையில் உள்ள் மணல் திட்டுக்களை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி

 தலைமன்னார் மற்றும் இந்தியாவை பிரிக்கும் பாக்கு நீரினை பகுதியில் காணப்படும் இலங்கைக்கு சொந்தமான 6 மணல் திட்டுக்களை பார்பத்ற்கான அனுமதி நீண்டகாலங்களாக மறுக்கப்பட்ட நிலையில் சுற்றுலா துறையை விருத்தி செய்யும் முகமாக குறித்த மணல் திட்டுக்களை பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கிடைக்க பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்


மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 


அவர் மேலும் தெரிவிக்கையில்


படகு போக்குவரத்து செய்ய கூடிய முதலீட்டாளர்களை பெற்று கொள்வதில் காணப்பட்ட தாமதம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதி காரணமாக குறித்த விடயம் தாமதிக்கப்பட்டிருந்தது எனினும் வருகின்ற 22 ஆம் திகதி அணைத்து பங்கு தாரர்கள் விசேடமாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச சபை மற்றும் முதலீட்டாளர்கள் எல்லா பங்கு தாரர்களும் இணைந்து ஒரு கூட்டத்தை ஒழுங்கமைத்துள்ளோம் அதன் பின்னர் குறித்த 6 மணல் திட்டுக்களையும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மிக விரைவில் இடம் பெற இருக்கின்றது


6 மணல் திட்டுக்களில் ஒரு மணல் திட்டில் சுற்றுலா பயணிகள் இறங்கி பார்வையிடுவதற்கான ஏற்பாடும் ஏனைய திட்டுக்களை படகில் இருந்தவாரே சுற்றிபார்பதற்கான ஏற்பாடுகளும் இடம் பெற்றுள்ளதாக அவர்  தெரிவித்தார்







இலங்கை இந்தியாவிற்கு இடையில் உள்ள் மணல் திட்டுக்களை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி Reviewed by Vijithan on April 16, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.