யாழில் 310 கிலோ கிராம் கேரள கஞ்சா சிக்கியது
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கஞ்சா போதைப்பொருளை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள், மற்றும் கைது செய்யப்பட்ட இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
யாழில் 310 கிலோ கிராம் கேரள கஞ்சா சிக்கியது
Reviewed by Vijithan
on
April 30, 2025
Rating:

No comments:
Post a Comment