அண்மைய செய்திகள்

recent
-

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களையும் இலக்கு வைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

மேலும், அதே நாளில் தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் சிறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.. 

இத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 270இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மேற்படி தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

இதன் பிரதான நிகழ்வு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் தலைமையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வௌிநாட்டுத் தூதுவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பங்ககேற்கவுள்ளனர். 

இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 8.45 மணிக்கு அனைத்து மத ஸ்தலங்களிலும் மணி அடிக்கப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.




உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு Reviewed by Vijithan on April 21, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.