அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை; யாழ் நபர் விபரீத முடிவு

 வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இதன் போது சாவகச்சேரி, கைதடியைச் சேர்ந்த 50 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,



பணம் அனுப்பவில்லை என விரக்தி


குறித்த நபரின் சகோதரர்கள் நால்வர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் அவர்கள் தனக்கு பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்து குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி நஞ்சருந்தியுள்ளார்.



பின்னர் அன்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றைய தினம் (19) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.



அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை; யாழ் நபர் விபரீத முடிவு Reviewed by Vijithan on April 21, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.