அண்மைய செய்திகள்

recent
-

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

 பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி , இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.




அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதியின் X கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது .



அவரது கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



  பரிசுத்த பாப்பரசர் இன்றையதினம்  மரணமடைந்ததாக  வத்திக்கான் தெரிவித்துள்ள நிலையில்,  உலக தலைவர்கள்  பாப்பரசர் மறைவுக்கு  இரங்கல்களை  தெரிவித்து




பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல் Reviewed by Vijithan on April 21, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.