முல்லைதீவில் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பெற்று சாதித்த பாஸ்கரன் பிரியங்கா
அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2A C பெறுபேறுகளைப் பெற்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி பாஸ்கரன் பிரியங்கா முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மத்தி கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற குறித்த மாணவி சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்தவர் தனது ஆரம்பக் கல்வியை முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்து தரம் ஆறு முதல் உயர் தரம் வரை வித்தியானந்தா கல்லூரியிலும் கற்று உயர்தர பரீட்சைக்கு தோன்றியிருந்தார்
இதன் அடிப்படையில் அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2A C பெறுபேறுகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்
இவருக்கு மக்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

No comments:
Post a Comment