புங்குடுதீவு மாணவி வித்தியாவின் 10 ஆண்டு நினைவு
யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இந்நிலையில் விதியாவின் நினைவு நாளில் இலங்கையில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டம்
யாழ் பிரதான பேருந்து நிலையம் முன்பாக இன்று (13) காலை இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில்,
பாலியல் தொல்லையற்ற வேலைத்தளங்களை உறுதிப்படுத்துவோம், அரசே அம்சிகாவிற்கு நீதியை பெற்றுக்கொடு, பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு இடமில்லை. சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துங்கள்.
வாக்கு சேகரிப்புக்கு திரள்பவர்கள் சமூக நீதிக்கு ஒதுங்குவது ஏன்? எமது நாட்டின் பண்பாடா பாலியல் வன்கொடுமை? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏங்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கொடுமைகள் தொடர்வதைத் தடுக்க, சட்டமன்ற, நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில் உள்ள பொறுப்பான நபர்கள் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Reviewed by Vijithan
on
May 13, 2025
Rating:


No comments:
Post a Comment