கிளீன் ஸ்ரீலங்கா -நானாட்டான் புனித டி லா சால் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனி
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக தற்போது பாடசாலைகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இந்த வேலை திட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கமாகவும், சமூக மட்டத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கல்வி நிர்வாக சேவையினால் வழங்கப்பட்ட சுற்றுநிறுபத்துக்கு அமைவாக இன்று 09.07.2025 காலை எட்டு மணி தொடக்கம் ஒரு மணி வரையான காலப்பகுதியில் இந்த வேலை திட்டத்தை முன்னெடுக்கும் நிகழ்வு இடம் பெற்றது .
இந்த வேலையினை நானாட்டான் புனித டி லா சால் கல்லூரி மாணவர்கள் பாடசாலை வளாகத்தை துப்புரவு செய்தல், மற்றும் பதாகைகளை தாங்கிய வண்ணமாக நானாட்டான் பஸ்தரிப்பு நிலையம் ,மற்றும் நானாட்டான் வீதி சுற்று வட்டம், நானாட்டாண் கடைத்தெரு போன்றவற்றில் பதாகைகள் ஏந்திய வண்ணமாக விழிப்புணர்வு நடைபவனி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

No comments:
Post a Comment