மன்னாரில் வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்.
வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (31) காலை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கூட்டத்தில்,பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் ,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர்கள்,பிரதேசச் செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உப தவிசாளர்கள், அமைச்சின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டதோடு மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட தெங்கு உற்பத்தியாளர்களுக்கான உரமானியம், உதவித்தொகை, பயனாளிகளுக்கான புதிய தென்னங் கன்று என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் பனை அபிவிருத்தி சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment