இந்தோனேசியாவில் சிக்கிய முன்னணி பாதாள உலக குழு உறுப்பினர்கள்!
இலங்கையின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த ஐவரும் பெண்ணொருவரும் இந்தோனேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பெக்கோ சமனின் மனைவி மற்றும் மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் சிக்கிய முன்னணி பாதாள உலக குழு உறுப்பினர்கள்!
Reviewed by Vijithan
on
August 28, 2025
Rating:

No comments:
Post a Comment