கச்சத்தீவை மீட்க வேண்டும் – விஜய்யின் அறிவிப்புக்கு இலங்கை தமிழ் மீனவர்கள் எதிர்ப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று (22) இடம்பெற்றது.
குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியின் உறுப்பினர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டத்தில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை தொடர்பிலும் அவர் முக்கிய கருத்து ஒன்றை முன்வைத்திருந்தார். இ
இந்திய கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுவதாகவும் எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதே இதற்கு ஒரே தீர்வு என்றும் இதனை பிரதமர் மோடி மீட்டுத்தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்விடயம் தற்போது இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜயின் அறிவிப்புக்கு வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை தமிழ் மீனவர்கள் குறித்த எவ்வித அக்கறையுமின்றி நடிகர் விஜய் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

No comments:
Post a Comment