அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றம்

 ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று (10) பிற்பகல் இடம்பெற்றது.  


இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.  


பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார். 


இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியுள்ளது.  


நேற்றைய தினம் இது தொடர்பான விவாதம் இடம்பெறவிருந்தது.  


எனினும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.  


இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


முன்னதாக ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் சரத்துகள் அரசியலமைப்பின் எந்தவொரு உள்ளீடுகளுக்கும் முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் நேற்று பாராளுமன்றில் வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றம் Reviewed by Vijithan on September 10, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.