வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது
நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர், ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஈரமான நாணயத்தாள்களை பிரிக்கும்போது, பொதுமக்கள் அவற்றை மெதுவாகக் கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரூபாய் நோட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டவுடன், அவற்றை உறிஞ்சக்கூடிய பொருளால் சுற்றி அறை வெப்பநிலையில் உலர விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளை உலர்த்தும்போது, வண்ணமயமான அல்லது அச்சிடப்பட்ட மேற்பரப்புகளைத் தவிர்த்து, சுத்தமான, உலர்ந்த மேற்பரப்பில் அவற்றைப் பரப்ப வேண்டும்.
சூடான நீர், சவர்க்காரம் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை உலர்த்தக்கூடாது, மாறாக காற்றோட்டமான இடத்தில் இயற்கையாகவே காற்றில் உலர்த்த வேண்டும்.
ரூபாய் நோட்டுகள் காய்ந்தவுடன், அவை பயன்படுத்த முடியாததாக இருந்தால், பொதுமக்கள் அவற்றை எந்த வணிக வங்கியிலும் மாற்றிக்கொள்ள முடிவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
December 05, 2025
Rating:


No comments:
Post a Comment