அண்மைய செய்திகள்

recent
-

Clean Sri Lanka மாபெரும் நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம் பெறவுள்ளது.*

 உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka  செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன “க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் *2025 டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை காலை 8.30 முதல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம் பெறவுள்ளது.* 


இந்த நடமாடும் சேவைகள் மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தம் தொடர்பான மக்களிற்குரிய நிவாரண சேவைகளிற்கு முக்கிய கவனம் செலுத்தப்படும்.


இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:


• அரச சேவைகளுக்கு பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதி ஏற்படுத்துதல்,

• சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்தல்,

• மக்கள் நேய வினைத்திறன் நிர்வாக அமைப்பை வலுப்படுத்தல்.


இத்திட்டம் மூலம்:


• பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்கும் அமைப்பை உருவாக்குதல்,

• சமூக மட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்,

• சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் தரமான நிர்வாகத்தை மேம்படுத்துதல்

எனும் நோக்கங்கள் அடைவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.


பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகள்


• வெள்ள அனர்த்த நிவாரண சேவைகள்

• பதிவாளர் நாயகம் திணைக்களம் (காலங்கடந்த பிறப்பு, இறப்பு மற்றும் திருத்தங்கள் ) தொடர்பான சேவைகள்

• மோட்டார்  போக்குவரத்து திணைக்களம் ( சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் வாகனப் பரிசோதனை ) தொடர்பான சேவைகள்

• ஓய்வூதியம் தொடர்பான சேவைகள்

• சொத்தழிவு காணாமல் போனோர் தொடர்பான சேவைகள்

• நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள்

• காணி தொடர்பான சேவைகள்

• சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள்

• சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்

• முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்

• வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள்

• திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் 

• மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்

• விவசாயத் திணைக்களம் தொடர்பான சேவைகள்

• கைத்தொழில் துறை தொடர்பான சேவைகள்

• நுகர்வோர் அதிகார சபையுடன் தொடர்பான சேவைகள்

• சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள் 

• மேலும் பல சேவைகள்


இவற்றுடன் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரத்திணைக்களத்தின் விசேட மருத்துவமுகாம், விசேட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் உயர் தொழிற்கல்வி வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் பொதுமக்களிற்கான  விழிப்புணர்வு நிகழ்வுகள் கலாசார நிகழ்வுகள் என்பனவும் இடம் பெறும்


மக்கள் அனைவரையும் குறிப்பிட்ட நடமாடும் சேவையில் கலந்து கொண்டு  உரிய சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.





Clean Sri Lanka மாபெரும் நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம் பெறவுள்ளது.* Reviewed by Vijithan on December 11, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.