முல்லைத்தீவில் Cleen Sri Lanka வேலைத்திட்டத்தின்கீழ் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி!
அண்மயில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கடற்கரைகளை Cleen Sri Lanka வேலைத்திட்டத்தின்கீழ் சுத்தம் செய்யும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலில் முதன் கட்டமாக முல்லைத்தீவு கடற்கரை மற்றும் கொக்கிளாய் முகத்துவார கடற்கரை என்பன இன்றய தினம் சுத்தம் செய்யப்பட்டன.
முல்லைத்தீவு கடற்கரை மாவட்ட அரச அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையிலும் நடைபெற்றது.
கொக்கிளாய் முகத்துவார கடற்கரை சுத்தம்செய்யும் பணியானது கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் திரு.விஜயகுமார் தலைமையிலும் நடைபெற்றது
குறித்த சிரமதானப் பணியில்
முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்,
கரைத்துரைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்,
இராணுவம், கடற்படை, பொலிஸார்,
கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் முதலானோரின் பங்குபற்றலில் இது நடைபெற்றது.
இதற்கான ஆதரவுவை வழங்கியுள்ளனர் Cleen Sri Lanka செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர்.
Reviewed by Vijithan
on
December 11, 2025
Rating:

.jpg)





No comments:
Post a Comment