அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு!

 மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

கொழும்பிலிருந்து, அக்கரைப்பற்று நோக்கி செல்வதற்காக சென்றிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

இந்நிலையில் நேற்று (1) இரவு 11:00 மணி வரை தமது மகன் தங்களுடன் தொடர்பில் இருந்ததாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு! Reviewed by Vijithan on January 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.