அண்மைய செய்திகள்

recent
-

-மன்னாரில் நீண்ட காலமாக கேட்பார் இன்றி காணப்பட்ட வீதி-ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடும் நடவடிக்கையில் அதிகாரிகள்.

 மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக  குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில்,குறித்த வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை.இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) மன்னாரிற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த வீதியில் காணப்படுகின்ற குன்றும் குழியையும் செப்பனிடும் பணியை உரிய திணைக்களத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


  மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டது.


எனினும் குறித்த வீதியை முழுமையாக அபிவிருத்தியை முன்னெடுக்க உரிய திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இவ்விடயம் தொடர்பாக குறித்த வீதிக்கு பொறுப்பான திணைக்களத்திடம் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.


எனினும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.இதனால் குறித்த வீதியூடாக மழைக்காலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.


மன்னார் நகரின் முக்கியமான குறித்த பிரதான வீதி தொடர்பாக யாரும் அக்கறை கொள்ளவில்லை. 


இந்த நிலையில் மன்னாரில் எதிர் வரும் வியாழக்கிழமை இடம் பெறவுள்ள காற்றாலை மின் கோபுர திறப்பு விழா மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற உள்ள நிலையில் ஜனாதிபதி குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.


இந்த நிலையில் ஜனாதிபதியின் வருகையையொட்டி தற்போது குறித்த வீதியில் காணப்படுகின்ற பாரிய குழி களை நிரப்பி செப்பனிடும் பணியை உரிய திணைக்களம் முன்னெடுத்து வருகின்றனர்











-மன்னாரில் நீண்ட காலமாக கேட்பார் இன்றி காணப்பட்ட வீதி-ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடும் நடவடிக்கையில் அதிகாரிகள். Reviewed by Vijithan on January 12, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.