அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல்தீவு கிழக்கு கிராமசேவகர் பிரிவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த உள்ளக வீதி சீரமைப்பு

 மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட விடத்தல்தீவு கிழக்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள உள்ளக வீதி, சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதன் ஊடாகப் பயணத்தை மேற்கொள்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, மக்களின் நாளாந்த போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, மாந்தை மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் பிறேம்குமார் அவர்கள், உபதவிசாளர், விடத்தல்தீவு வட்டார உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை பணியாளர்கள் இணைந்து குறித்த வீதியை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.


அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட உள்ளக வீதியை சீர்திருத்தும் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சீரான முறையிலும் பயணிக்கக்கூடிய வகையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.











மன்னார் விடத்தல்தீவு கிழக்கு கிராமசேவகர் பிரிவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த உள்ளக வீதி சீரமைப்பு Reviewed by Vijithan on January 12, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.