பேசாலை சென்/மேரிஸ் பெண்கள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கால்கோள் விழா
2026 ஆம் ஆண்டிற்கான மன்னார் வலயக் கால்கோள் விழாவானது இன்று வியாழன் (29) மன் பேசாலை சென்.மேரிஸ் பெண்கள் வித்தியாலயத்தில் கல்லூரியின் முதல்வர் திருமதி ஜே.எஸ். விவியன் பீரிஸ் தலைமையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக பேசாலை பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளார், முருகன் கோயில் இந்து மதக் குரு பிரம்மஸ்ரீ தர்ம குமார சர்மா குருக்கள் , காட்டாஸ்பத்திரி பள்ளி வாயில் மௌலவி ஏ.எம்.அபான் ,மன்னார் வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பொது நிர்வாகம்) ஆதவன் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி) . தவேந்திரலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
January 29, 2026
Rating:
.jpg)







No comments:
Post a Comment