அண்மைய செய்திகள்

recent
-

அக்குரேகொட இரட்டைப் படுகொலை: பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

 அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் முகத் தோற்றத்தின் பல்வேறு வடிவங்களைக் காட்டும் நிழற்படங்களை பொலிஸார் இன்று (20) ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ளனர். 


குறித்த நபர் சுமார் 5 அடி 5 அங்குல உயரமுடையவர் என்றும், சுமார் 44 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் அவரது வலது பக்கக் கன்னத்திற்குக் கீழே முகத்தில் வெட்டுக்காயத் தழும்பு ஒன்று இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிந்திருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்: 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் / மேல் மாகாண வடக்கு - 071 859 8008 

பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி / நுகேகொடை - 071 859 1641 













அக்குரேகொட இரட்டைப் படுகொலை: பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் Reviewed by Vijithan on February 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.