மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு-தொடர்ந்து இடம் பெற்ற நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு
மன்னார், தாராபுரம் ஹுஸைனியா பள்ளிவாயலில் புதிய ஹிப்ழ் (மனன பிரிவு) மத்ரஸா அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பித்து வைத்தார்.
மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, “இக்ராஹ் – ஓதுவீராக” என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய நெறிமுறைகள், கல்வி விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, இவ்வருடத்திற்கான 2வது கல்விசார் நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்களிடையே கல்வி விழிப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வில், ஹூஸைனியா பள்ளிவாயலின் தலைவரும் முன்னாள் மாகாண இளைஞர் பணிப்பாளருமான என்.எம்.முனவ்பர் , மன்னார் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மௌலவி அஸீம், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற சபை தவிசாளர், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வை தொடர்ந்து விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கின்ற இப்தார் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
February 23, 2026
Rating:















No comments:
Post a Comment