பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள்
சில்லறைக் கடைகளை குறிவைத்து குற்றக் கும்பல்கள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு 5.5 மில்லியன் கடைத் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில்துறைக்கு 400 மில்லியன் பவுண்ட்ஸ் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சராசரியாக ஒவ்வொரு நாளும் ஆயுதம் சம்பந்தப்பட்ட 36 வன்முறை சம்பவங்களை கடை ஊழியர்கள் எதிர்கொண்டிருந்ததாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அதிக அளவிலான திருட்டு சம்பவங்கள் சில்லறை விற்பனை ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சில்லறை கடைகள் இலக்கு வைக்கப்படும் குற்றங்களைச் சமாளிப்பதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கவும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவும் பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Reviewed by Vijithan
on
February 24, 2026
Rating:


No comments:
Post a Comment