-மன்னாரில் சிறு சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்
நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளுரில் சுய தொழிலில் ஈடுபடும் குறிப்பாக சமூக மட்டத்தில் சிறு சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்கும் பெண்களை குறித்த சட்டத்துக்குள் கொண்டு வருவதால் தமக்கு ஏற்படவுள்ள பாதிப்பு களை கருத்தில் கொண்டு அதற்கு எதிராக மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பதாதைகளில் 'கிராமிய சேமிப்பு திட்டங்களை அளித்து நிதி நிறுவனங்களுக்கும் வட்டிக்காரர்களுக்கும் வாய்ப் பளிக்காதே , 'இச்சட்டம் பெண்களை அடிமையாக்க நுண் நிதி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது,இச்சட்டம் சுய உதவி குழுக்களின் சேமிப்புகளை ஆபத்திற்குள் தள்ளுகிறது,அவசர தேவைக்கு பணம் கிடைக்கும் ஒரே வழியான சமூக சேமிப்பு திட்டங்களை தடை செய்யாதே, 'நாங்கள் இச்சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஏழைகள் சமூக மட்ட சேமிப்பு இல்லாமல் எதிர் கொள்ளப் போகும் அவல நிலையை மீள் பரிசீலனை செய்யுங்கள்' போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவர்களாக பெண்கள் காணப்பட்டனர்.
தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலில் வைத்து ஜனாதிபதிக்கான மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த மகஜரை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
March 03, 2026
Rating:


.jpeg)
.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment