அண்மைய செய்திகள்

recent
-

அம்பாறை இசை நிகழ்ச்சியில் அடிதடி; பொலிஸார் மீது தாக்குதல்

 அம்பாறையில் இசை நிகழ்ச்சி ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் காவல்துறை பரிசோதகர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


அம்பாறையில் நேற்றிரவு இடம்பெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றின் நிறைவில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்ற நிலையில் அவர்களை அம்பாறை காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு அனுப்பியுள்ளனர்.



 மதுபோதையில் உணவு அருந்திக்கொண்டிருந்த நபர்


தொடர்ந்து அம்பாறை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அந்த குழுவினர் மீண்டும் கூடியதை அடுத்து . காவல்துறையினரும் அப் பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நிலைமையைக் கண்காணிக்க காவல்துறையினர் அங்கு சென்றபோது, கடை உரிமையாளர் தனது கடையிலிருந்த ஒலிபெருக்கியின் (Speaker) சத்தத்தை அதிகரித்துள்ளார். அதிக சத்தம் காரணமாக மீண்டும் மோதல் வெடிக்கலாம் என கருதிய அம்பாறை தலைமையக காவல்துறை பரிசோதகர், சத்தத்தைக் குறைக்குமாறு கோரியுள்ளார்.


இதற்கு கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்தபோது, அங்கு மதுபோதையில் உணவு அருந்திக்கொண்டிருந்த நபர் ஒருவர் தலையிட்டு, காவல்துறை பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


வாக்குவாதம் வலுக்கவே அங்கிருந்த ஏனையோரும் காவல்துறையினருக்கு எதிராகக் கூச்சலிட்டுள்ளனர். ஒருகட்டத்தில் காவல்துறை பரிசோதகரின் சீருடையைப் பிடித்து இழுத்து அவர் மீது தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளனர்.



காவல்துறையினர் மிகக் கடுமையாகத் தாக்கியதாக  உறவினர்கள் குற்றம்


இதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. இந்த முறுகல் நிலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்து , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ அறிக்கைகளின்படி அவர்கள் இருவரும் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் மிகக் கடுமையாகத் தாக்கியதாக அவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இசை நிகழ்ச்சியின் பின்னர் ஏற்பட்ட அமைதியற்ற சூழலைச் சீர்செய்ய முயன்றபோது, மதுபோதையில் இருந்த கும்பல் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் சம்பவம் குறித்து எவ்வித பக்கச்சார்புமின்றி விசாரணை நடத்துவதற்காக, அம்பாறை உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) தலைமையிலான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





அம்பாறை இசை நிகழ்ச்சியில் அடிதடி; பொலிஸார் மீது தாக்குதல் Reviewed by Vijithan on March 28, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.