அண்மைய செய்திகள்

recent
-

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை -மன்னாரில் எரிபொருளை சீரான முறையில் வினியோகிப்பது குறித்து அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

 மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் முகாமைத்துவத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அவசர கூட்டம் மன்னார் மாவட்ட   அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று புதன்கிழமை (4) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.



பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் விவசாயிகள் , மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் நிலைமை களை கருத்தில் கொண்டு எரிபொருள் தொடர்பான நிலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வரும் வகையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.


குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள்,பொறுப்பாளர்கள், உட்பட மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்,. பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் உதவி பணிப்பாளர் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்,உட்பட அரச திணைகள் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


தற்போதைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டு வரும் நிலைமை களை கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட செயல்பாடுகளை சுமுகமாக மக்கள் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கும் வகையில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.














மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை -மன்னாரில் எரிபொருளை சீரான முறையில் வினியோகிப்பது குறித்து அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல் Reviewed by Vijithan on March 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.