அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி விவசாயிகள் ஆத்திரம்; அர்ச்சுனா எம்பிக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு!

 கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கிளிநொச்சியில் கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மீதும் ஏனைய கமக்காரர் அமைப்புக்கள் மீதும் ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.



  கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த அர்ச்சுனா


குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க கோரி ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரிடம் மகஜர் கையளிக்கும் நோக்குடனும் விவசாயிகள் மீதான பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தி இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன 28 அமைப்புக்களைச் சேர்ந்த விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.




இதன்போது காக்கா கடைச்சந்தியிலிருந்து ஆரம்பித்த போராட்டமானது பேரணியாக மாவட்ட செயலகம் வரை வந்து மாவட்ட செயலரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர்.




அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் விவசாய அமைப்புக்கு எதிராக செயற்படும் இருவரின் கொடும்பாவிகளும் விவசாயிகளினால் எரிக்கப்பட்டது  .





கிளிநொச்சி விவசாயிகள் ஆத்திரம்; அர்ச்சுனா எம்பிக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு! Reviewed by Vijithan on March 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.