இஸ்ரேலிய - அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம் - IRGC எச்சரிக்கை
மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிராந்தியத்திலுள்ள அத்தகைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.
பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு, ஈரான் பல்கலைக்கழகங்கள் மீதான குண்டுத் தாக்குதல்களை அமெரிக்கா கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கண்டனத்தை மார்ச் 30ஆம் திகதி ஈரான் நேரப்படி நண்பகல் 12:00 மணிக்கு முன்னதாக அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் எனவும் ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Reviewed by Vijithan
on
March 29, 2026
Rating:


No comments:
Post a Comment