அண்மைய செய்திகள்

recent
-

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது

 யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் 57 போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் நேற்றைய தினம் (26) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கொழும்புத்துறைப் பகுதியில் போதை மாத்திரைப் பயன்பாடு அதிகளவில் காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. 

அந்தத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.





யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது Reviewed by Vijithan on March 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.