அண்மைய செய்திகள்

recent
-

யாழில் ஹெரோயினுடன் வியாபாரி கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குருநகர் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

 

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




யாழில் ஹெரோயினுடன் வியாபாரி கைது! Reviewed by Vijithan on April 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.