அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் சந்திப்பு?
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ஈரானும் இந்தவாரம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்புள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
இதற்காக இரண்டு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் மீண்டும் இஸ்லாமாபாத் திரும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரண்டு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
அந்த பேச்சுவார்த்தையில் யுரேனியம் செறிவூட்டலை 20 வருடங்களுக்கு நிறுத்த வேண்டும் என அமெரிக்கா ஈரானிடம் கோரிக்கை விடுத்தது.
எனினும் 5 வருடங்களுக்கு மாத்திரமே யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி வைப்பதற்கான உடன்பாட்டை ஈரான் வௌிப்படுத்தியிருந்தது.
இதனால் குறித்த பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இரண்டாவது தடவையாகவும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்தியஸ்த்தம் வகிக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது.
குறித்த சூழலில் இந்த வாரம் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறலாம் என ரொயிட்டர்ஸ் கூறியுள்ளது.
Reviewed by Vijithan
on
April 14, 2026
Rating:


No comments:
Post a Comment