அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் 61 நாட்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக குறித்த மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
இதன்போது அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களும், படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது
Reviewed by Vijithan
on
April 14, 2026
Rating:


No comments:
Post a Comment