அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு
வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியில் இருந்து மனித எலும்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பகுதி ஒன்றின் பற்றைக் காணி ஒன்றில் எலும்புக் கூடுகள் இருப்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இந்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
அவர் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு
Reviewed by Vijithan
on
April 14, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 14, 2026
Rating:


No comments:
Post a Comment