அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து யுவதி உயிரிழப்பு

 யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (03)  கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 
ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
 
குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றையதினம் கிணற்றினுள் தவறி விழுந்துள்ளார்.
 
பின்னர் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.






 
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.






யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து யுவதி உயிரிழப்பு Reviewed by Vijithan on May 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.