அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் வயலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு

   முல்லைத்தீவில் வயலுக்கு காவலுக்குச் சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (23) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,


முல்லைத்தீவு குமுழமுனையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல்பகுதிக்கு நேற்று (22) திங்கட்கிழமை இரவு சென்ற நிலையில் இன்றையதினம் அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.





குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த சர்விதன் என்ற இளைஞரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் வயலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு Reviewed by Vijithan on June 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.