அண்மைய செய்திகள்

recent
-

ரயில் பயணித்தில் செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

 ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். 


இன்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட 3 துருக்கி யுவதிகள் இந்தப் ரயிலில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்






ரயில் பயணித்தில் செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து Reviewed by Vijithan on July 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.