அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐத் தாண்டியது

 இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

ஜூலை மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 19,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 39,667 ஆகும்.

 

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 11,610 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,325 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,305 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

 

ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,762 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 15,000 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,280 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

டெங்கு தொற்று காரணமாக இதுவரை 53 பேர் உ



யிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.






டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐத் தாண்டியது Reviewed by Vijithan on July 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.