மன்னாரில் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மன்னார் பொலிஸாரால் மீட்பு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்ட விரோதமான முறையில் கொண்டு கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் இன்று சனிக்கிழமை (4) காலை மீட்டுள்ளனர்.
குறித்த இரண்டு மாடுகளும் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு குறித்த மாடுகளை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என்றும் மன்னாரில் பொலிஸ் கொஸ்தபலாக கடமையாற்றி தற்காலிகமாக பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் என்று தெரிய வருகிறது.
மேலும் அவருக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
July 04, 2026
Rating:


.jpeg)

.jpeg)

No comments:
Post a Comment