அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெண்கள் பாடசாலை ஒன்றில் 5 ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை - சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

 மன்னாரில் உள்ள பிரபல பெண்கள்  பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 


குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வகுப்பாசிரியர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சிறுமி தவறான பதிலளித்ததாக கூறப்படுகிறது. 


இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையில் சிறுமியின் கன்னத்தில் பலமாக  பல தடவைகள் அறைந்துள்ளார்.


ஆசிரியரின் இந்தத் தாக்குதலால், சிறுமியின் கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டு, இரத்த கண்டல்கள் காணப்பட்ட நிலையில் உடனடியாக பெற்றோர்களால்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்   செல்லப்பட்ட நிலையில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தற்போது சிறுமி வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிறுமியைத் தாக்கிய ஆசிரியை மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இது தொடர்பாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.




மன்னாரில் பெண்கள் பாடசாலை ஒன்றில் 5 ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக அறைந்த ஆசிரியை - சிறுமி வைத்தியசாலையில் அனுமதி! Reviewed by Vijithan on July 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.