அண்மைய செய்திகள்

recent
-

போதைப்பொருளுடன் கைதான இலங்கை நடிகர்!

 போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்களச் சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு, குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து 5,000 ரூபாய் அபராதம் விதித்து கல்கிஸ்ஸ நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.


மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்திற்கு வந்தால், கட்டாயப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என்றும் நீதவான் சந்தேகநபருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.




வெள்ளவத்தை பிரபல உணவகம் ஒன்றில் சோதனை

வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தைக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.



இதன்போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐந்து பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு, கல்ஹிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



கைது செய்யப்பட்டபோது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெயின் (Cocaine) கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.





போதைப்பொருளுடன் கைதான இலங்கை நடிகர்! Reviewed by Vijithan on September 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.