அண்மைய செய்திகள்

recent
-

வியாபாரியிடம் மனைவியை இலஞ்சமாக கேட்ட பொலிஸ்! தமிழர் பகுதியில் சம்பவம்

  திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கப்பம் செய்யப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டுமாவடியைச் சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரை   சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




 வியாபாரியை விடுவிப்பதற்கு    பாலியல் இலஞ்சம்


குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.


.



வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது.



  இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.




 இதனையடுத்து  பொலிஸ் உப பரிசோதகரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.






வியாபாரியிடம் மனைவியை இலஞ்சமாக கேட்ட பொலிஸ்! தமிழர் பகுதியில் சம்பவம் Reviewed by Vijithan on September 07, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.