பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை
பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.
அதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்தப்பட வேண்டிய' (Caution) மட்டத்தில் காணப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
September 07, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 07, 2026
Rating:


No comments:
Post a Comment