மன்னார் கீரி கடற்கரையில் கோலாகலமாக நடை பெறவுள்ள உலக சுற்றுலா தினம்! நிகழ்வுக்கான முன்னாயத்தப் பணிகள் தீவிரம் – கீரி மற்றும் தாழ்பாடு கிராம மக்களுடன் அதிகாரிகள் நேரில் கலந்துரையாடல்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மன்னார் கீரி கடற்கரையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிகழ்வுக்கான முன்னாயத்தப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஏற்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை நேரில் பார்வையிடும் வகையில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர், சுற்றுலா வடக்கு (Tourism North) அமைப்பின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் கீரி கடற்கரைக்கு நேரில் விஜயம் செய்தனர்.
இதன்போது, உலக சுற்றுலா தின நிகழ்வு நடைபெற உள்ள கீரி கடற்கரைப் பகுதியை நேரில் பார்வையிட்ட அதிகாரிகள், நிகழ்வின் ஏற்பாடுகள், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டனர்.
அத்துடன், நிகழ்வு நடைபெற உள்ள கீரி மற்றும் தாழ்பாடு கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் அதிகாரிகள் நேரடி கலந்துரையாடலை மேற் கொண்டனர்.
இதன்போது, உலக சுற்றுலா தின நிகழ்வை சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடத்துவதற்கு கிராம மக்களால் வழங்கப்படவுள்ள ஒத்துழைப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது டன், நிகழ்வை முன்னெடுப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களும் கேட்டறியப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் கடற்கரை வளங்கள் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில், உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி கீரி கடற்கரையில் நடை பெறவுள்ள உலக சுற்றுலா தின நிகழ்வை முன்னிட்டு, அப்பகுதி தற்போது விழாக்கோலம் பூண்டு வருகிறது.
Reviewed by Vijithan
on
September 23, 2026
Rating:
.jpg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

No comments:
Post a Comment